கரோனா பெருந்தொற்று, உய்கர் இன மக்கள் மீதான அடக்குமுறை, தென் சீனக் கடலில் கையாளப்படும் அராஜகப் போக்கு, ஹாங்காங்கிற்கான தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் சீனாவை அமெரிக்கா தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
இதன்தொடர்ச்சியாக, சீனா மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ள அமெரிக்கா, சீன அலுவலர்கள் மீது தடை விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ வெளியிட்டிருந்த அறிக்கையில், "சீனாவின் தன்னாட்சிப் பிராந்தியமான திபெத்துக்குள் வெளிநாட்டுத் தூதர்கள், பத்திரிகையாளர்கள், சுற்றுலாப் பயணிகளைச் சீன அரசு அனுமதிக்க மறுக்கிறது. மறுபக்கம், சீன மக்கள் அமெரிக்காவுக்குள் சுதந்திரமாக வந்து செல்கின்றனர்.
ஆகையால், திபெத் குறித்த கொள்கை முடிவுகளை எடுக்கும் சீன கம்யூனிசக் கட்சி அலுவலர்கள் மீது பயணத் தடை விதிக்கவுள்ளோம்.
திபெத்துக்குள் வெளிநாட்டவர்கள் அனுமதி அளிக்கப்பட்டாலே, அங்கு நிலைமை சீராகும். இல்லையென்றால், சீன அரசு அப்பிராந்திய மக்கள் மீது மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களையும், சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் தடுக்க முடியாது" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பிரேசில் அதிபருக்கு கரோனா!