உலகமே கணினிமயமாகிவரும்சூழலில் மென்பொருள் சார்ந்த நிறுவனங்கள் வைரஸ் தாக்குதல், ஹேக்கர்கள் ஊடுருவல் எனப் பல்வேறு அச்சுறுத்தல்களைச் சந்தித்துவருகின்றன. இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள கணினி அமைப்புகளுக்குள் ரஷ்யா ஹேக்கர்கள் ஊடுருவத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கைவிடுத்துள்ளது.
ரஷ்யா ஹேக்கர்கள்
இது தொடர்பாக அமெரிக்காவின் இணைய பாதுகாப்புப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ரஷ்யாவைச் சேர்ந்த சில ஹேக்கர்களால், மாநில, உள்ளூர், பிராந்திய அரசுகளுக்கும், முக்கியமான உள்கட்டமைப்பு நிறுவனங்கள் மற்றும் பிற தனியார் துறை மென்பொருள் நிறுவனங்களுக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அரசின் கருவூலம் மற்றும் வர்த்தகத் துறைகள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் மென்பொருள்களில் நுழைந்து அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் ஊடுருவியுள்ளனர். நெட்வொர்க் மென்பொருள் மூலம் செருகப்பட்ட வைரஸ்களை நீக்குவது மிகவும் கடினமான செயல் என்று சைபர் பிரிவு எச்சரித்துள்ளது.
இந்தச் சூழல்களில் வைரஸ் அச்சுறுத்தலை நீக்குவது மிகவும் சிக்கலானது மற்றும் நிறுவனங்களுக்குச் சவாலாக அமையும்" எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற மாட்டேன்' - அடம்பிடிக்கும் ட்ரம்ப்!