சீனாவின் வூகான் நகரில் பரவத்தொடங்கிய கரோனா வைரஸ் தற்போதுவரை 190 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை அடுத்து, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் இந்த வைரசால் அதிகளவு பாதிப்பை சந்தித்துவரும் நிலையில், தற்போது அமெரிக்கா சீனாவிற்கு அடுத்தபடியான இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அமெரிக்காவில் நேற்று ஒருநாள் மட்டுமே கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்துள்ளது.
கரோனா வைரசைக் கட்டுப்படுத்த அமெரிக்கா தவறிவிட்டதாகப் பல்வேறு அமைப்புகளும் குற்றச்சாட்டுகளை வைத்துவரும் நிலையில், தற்போது அமெரிக்காவில் 82 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது கரோனா வைரசால் சீனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பவன் கல்யாண் காரு செயல் என்னை ஈர்த்தது...இப்போ நானும் செய்றேன் - ராம்சரண்