ETV Bharat / international

ஈரானுடன் சமரசம் - அமெரிக்கா முடிவு! - ஈரான் அமெரிக்கா மோதல்

ஈரான் மீதான தடைகளை நீக்கி, அந்நாட்டுடன் சமரசம் செய்துகொள்ள அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளது.

Iranian Supreme Leader Ali Khamenei
Iranian Supreme Leader Ali Khamenei
author img

By

Published : Jun 27, 2021, 5:20 PM IST

ஈரான்-அமெரிக்கா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவிவருகிறது. ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் குறித்து தொடர் விமர்சனங்களை முன்வைத்துவரும் அமெரிக்கா, அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தது.

இரு நாடுகள் சமரசம்?

பிராந்திய அமைதியை நோக்கில் கொண்டு, இரு நாடுகளிடையே சமரச முயற்சி, கடந்த 2015ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் பலனாக ஜேசிபிஓஏ( Joint Commission of the Joint Comprehensive Plan of Action - JCPOA) என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் கையெழுத்திட்ட நிலையில், சில ஆண்டுகளிலேயே இந்த சமரசம் பின்னடைவைச் சந்தித்தது.

தொடர்ந்து அணு செறிவூட்டலில் ஈடுபட்டதாகக் கூறி, கடந்த 2019ஆம் ஆண்டு டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, ஈரான் மீதும், அந்நாட்டு தலைவர்கள் மீதும் தடை விதித்தது.

இந்தநிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜோ பைடன் அரசு, மீண்டும் சமரசத்திற்கு முன்வந்துள்ளது.

ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா காமெனி மீது விதிக்கப்பட்டுள்ள தடையை அமெரிக்கா விலக்கிக்கொள்ள முடிவெடுத்துள்ளது.

இதன் மூலம் இரு தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என, சர்வதேச அரசியல் நோக்கர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு - காவலருக்கு தண்டனை அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.