கரோனா வைரஸ் நோயால் உலக நாடுகள் ஆட்டம் கண்டுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 33,43,856 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவல் காரணமாக 2,38,645 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கான மருந்தை கண்டுபிடிக்க முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் திணறி வருகின்றனர்.
இதனிடையே, மலேரியாவுக்கு அளிக்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற மருந்தை கரோனா சிகிச்சைக்கு அளிக்கலாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் இம்மருந்தை பரிந்துரை செய்தது. இருப்பினும், நோய் கட்டுக்குள் வரவில்லை.
பல்வேறு விதமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, கரோனா நோயாளிகளின் அவசர சிகிச்சைக்காக ரெம்டேசிவிர் என்ற மருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வாழ் இந்திய மருத்துவரான அருணா சுப்ரமணியம் கூறுகையில், "இந்த மருந்தை உட்கொள்வதால் விரைவில் குணமடையலாம்" என்றார்.
இதையும் படிங்க: ஒரே வாரத்தில் நைஜீரியாவில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய தீ விபத்து!