அமெரிக்க விமானங்கள் இனி பாகிஸ்தான் எல்லைக்குள் பறப்பதை தவிர்க்க வேண்டுமென விமான ஓட்டிகளுக்கு அந்நாட்டின் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (எஃப்.ஏ.ஏ.) உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களால் எப்போது வேண்டுமானாலும் விமானங்கள் தாக்கப்படலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிர்வாகம் கூறியுள்ளது.
விமான ஓட்டிகளின் பாதுகாப்பையும் உயிரையும் கருத்தில்கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதலை எதிர்த்து கடந்தாண்டு பிப்ரவரி மாதம் இந்தியா பாலகோட் தாக்குதலை நிகழ்த்தியதால், பாகிஸ்தான் வான்வழியை இந்தியா பயன்படுத்த அந்நாடு தடைவிதித்தது. இதையடுத்து கடந்தாண்டு ஜூலை மாதம் தடையை பாகிஸ்தான் விலக்கிக்கொண்டது. எனினும், கடந்தாண்டு அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியா செல்வதற்கு பாகிஸ்தான் அனுமதி அளிக்கவில்லை.
இதையும் படிங்க: அமெரிக்கா தாக்குதல்: ஈரான் ராணுவத் தளபதி மரணம்!