கரோனா பாதிப்பு பரவலை தடுக்க உலக நாடுகள் ஒரு மாத காலமாக போராடிவருகின்றன. இந்த வைரஸ் பாதிப்பிற்கு பிரத்யேக மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
அதேசமயம், மலேரியா, எச்.ஐ.வி உள்ளிட்ட நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளே இந்நோய் சிகிச்சைக்காக தற்காலிகமாக பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற மருந்து முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தியாவில் இந்த மருந்துகள் பெருமளவில் தயாரிக்கப்பட்டு போதிய இருப்பு உள்ளதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இம்மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்து உதவியுள்ளது.
இந்தச் செயலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தனது நன்றியை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ”இந்தப் பெருந்தொற்றை எதிர்த்து உலக நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம் இது. இந்தச் சூழலில் 55க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்து கொடுத்து இந்தியா உதவியதற்கு தலை வணங்குகிறோம்” என்றார்.
இதையும் படிங்க: கரோனாவுக்கு பிந்தைய உலகம் கண்டுள்ள பெரும் மாற்றங்கள் என்ன? ஒரு அலசல்