ETV Bharat / international

3 நிமிட வீடியோ காலில் 3,700 பேரை வேலையை விட்டுத் தூக்கிய ஊபர்! - 3700 பேரை வேலையைவிட்டு தூக்கிய ஊபர்

வாஷிங்கடன்: ஊபர் நிறுவனம் ஜூம் வீடியோ கால் மூலம் தனது நிறுவனத்தில் பணிபுரியும் 3,700 பேரை ஒரே நாளில் வேலையைவிட்டு நீக்கியுள்ளது.

Uber lays off
Uber lays off
author img

By

Published : May 15, 2020, 12:51 PM IST

கோவிட்-19 தொற்று காரணமாக பல்வேறு நிறுவனங்களும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துவருகின்றன. குறிப்பாக, அமெரிக்க நிறுவனங்கள் நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஊழியர்களை வேலையைவிட்டு நீக்குவது, கட்டாய விடுப்பு அளிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளன.

அந்த வகையில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஊபர் நிறுவனம் தன் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 14 விழுக்காடு பணியாளர்களை, அதாவது 3,700 பேரை ஒரே நாளில் வேலையைவிட்டு நீக்கியுள்ளது. ஜூம் வீடியோ கால் மூலம் பணியாளர்களைத் தொடர்பு கொண்டு இத்தகவலைத் தெரிவித்துள்ளனர்.

சுமார் மூன்று நிமிடம் நீடித்த இந்த வீடியோ காலில் பணியாளர்களிடம் 'இதுதான் ஊபர் நிறுவனத்தில் உங்களின் கடைசி நாள்' என்று கூறி வேலையைவிட்டு தூக்கியுள்ளது.

கோவிட்-19 தொற்று காரணமாகப் பயணிகள் ஊபர் மூலம் கார் சேவையைப் பயன்படுத்துவது, 50 விழுக்காட்டிற்கும் மேல் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அந்நிறுவனத்தின் மேலாளர் ரஃபின் சாவேலியோ, நிதி நெருக்கடி காரணமாக வேறு வழியின்றி இந்த முடிவு எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டில் ஊபர் நிறுவனத்தின் வருவாய் 14 விழுக்காடு வரை உயர்ந்திருந்தபோதும், செலவுகள் போக அந்நிறுவனத்தின் நஷ்டம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஊபர் நிறுவனத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 10 லட்சம் கோடியைக் கடந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.