வெனிசுவேலாவில் அதிபர் மடூரோவுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவாய்டோ தலைமையில் நடைபெறும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, மடூரோவுக்கு ஆதரவு அளித்துள்ள நாடுகளில் ஒன்றான கியூபா தனது ராணுவத்தை வெனிசுவேலாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கியூபா ராணுவப்படை உடனடியாக வெனிசுவேலாவை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட ட்ரம்ப் தெரிவித்துளளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "வெனிசுவேலாவிலிருந்து கியூபா ராணுவப்படை உடனடியாக வெளியேறவில்லை என்றால் அதிகளவிலான பொருளாதார தடை விதிக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்தார். மேலும், அமைதியான முறையில் வெனிசுவேலாவிலிருந்து கியூபா ராணுவத்தினர் நாடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.