வெனிசுலா நாட்டில் உள்நாட்டு குழப்பம் நிலவிவருகிறது. தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்ட ஜூவான் குவைடோவை அமெரிக்கா அங்கீகரித்துள்ள நிலையில், அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்கியுள்ளது.
ஜூவான் குவைடோவுக்கு ஆதரவாக அமெரிக்கா உதவிப் பொருட்களை அனுப்பியபோது, அதிபர் மதுரோ, அதனை உள்ளே நுழையாதபடி செய்தார்.
மேலும் எல்லைப் பகுதியில் போர் பதற்றம் அதிகத்து கொண்டிருந்த நிலையில், அதிபர் மதுரோவுக்கு ஆதரவாக ரஷ்யா இரண்டு போர் விமானங்களில் நூற்றக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை வெனிசுலாவில் தரையிறக்கியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுகையில், ரஷ்யா வெனிசுலாவுக்கு அனுப்பியுள்ள படைகளை திரும்பப் பெற்றுகொள்ள வேண்டும். அமைதி பேச்சுவார்த்தைக்கு இன்னும் நிறைய வழிகள் உள்ளன என மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.
இதனிடையே அமெரிக்கா-வெனிசுலாவுக்கு இடையே செல்லும் அனைத்து விமானங்களையும் அமெரிக்க அரசு காலவரையின்றி நிறுத்தியுள்ளது.