பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. கரோனா தொற்று அறிகுறி காரணமாக அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில், பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மேக்ரான், வீட்டிலிருந்தே அலுவல் பணிகளை மேற்கொள்ளப்போவதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் விரைவில் குணமடைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜட் டீரெ வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'கரோனாவால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட ட்ரம்ப், அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.