ETV Bharat / international

பதவிநீக்க தீர்மானங்களை செனட் சபைக்கு அனுப்பாமலிருப்பது நியாமல்ல - ட்ரம்ப்

author img

By

Published : Dec 22, 2019, 7:10 PM IST

வாஷிங்டன்: தனக்கு எதிரான பதவிநீக்க தீர்மானங்களை செனட் சபைக்கு அனுப்பாமல் ஜனநாயகக் கட்சியினர் காலம் தாழ்த்துவது நியாயமற்றது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

TRUMP, ட்ரம்ப், டிரம்ப், அதிபர் ட்ரம்ப்
TRUMP

டர்னிங் பாய்ண்ட் இன் யு.எஸ்.ஏ. (Turning Point in USA) என்ற அமைப்பு சார்பாக ஃபுளோரிடாவில் நடைபெற்ற பழமைவாதத்துக்கு ஆதரவான மாணவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனக்கு எதிரான பதவிநீக்க தீர்மானங்கள் குறித்து பேசினார்.

அப்போது, "எனக்கு எதிராகப் பிரதிநிதிகள் சபையில் (நாடாளுமன்ற கீழ் சபை) நிறைவேற்றப்பட்டுள்ள பதவிநீக்கத் தீர்மானங்களை செனட் சபைக்கு அனுப்பாமலிருப்பது நியாயமானதல்ல. பதவிநீக்கத் தீர்மானத்தை உடனடியாக செனட் சபைக்கு அனுப்ப வேண்டும்.

அவர்கள் (ஜனநாயகக் கட்சியினர்) அமெரிக்க அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமாகச் செயல்படுகின்றனர். ஜனநாயகக் கட்சியினருக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லைபோல. பதவிநீக்க தீர்மானங்களுக்கு ஆதரவாக குடியரசுக் கட்சியின் ஒரு பிரதிநிதிகூட வாக்களிக்கவில்லை.

நம் அரசியல் சாசன சட்டத்தையும் வரலாற்றையும் கிழித்தெறிந்து நமது நாட்டின் எல்லைக்கோடுகளை அழிக்க ஜனநாயகக் கட்சியினர் முயன்றுவருகின்றனர். இதனைத் தடுக்க வேண்டியது உங்கள் கடமை" எனத் தெரிவித்தார்.

2020 அதிபர் தேர்தலில் தனக்கு எதிராகப் போட்டியிடவுள்ள முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனை கலங்கடிக்கும் நோக்கில், அதிபர் ட்ரம்ப் உக்ரைன் நாட்டுக்கு அழுத்தம் கொடுத்ததாக சில மாதங்களுக்கு முன்பு புகார் எழுந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, பிரதிநிதிகள் சபையில் ட்ரம்ப்புக்கு எதிராக இரண்டு பதவி நீக்க தீர்மானங்கள் நிறைவேறின. அடுத்ததாக, செனட் சபைக்கு (மேல் சபை) இந்தத் தீர்மானம் அனுப்பப்படவுள்ளது.

செனட் சபையில் குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையாக இருப்பதால் இந்தத் தீர்மானம் நிறைவேறாது என நம்பப்படுகிறது. ஆகையால், ட்ரம்ப்புக்கு எதிராக மேலும் பல வலுவான ஆதாரங்களைத் திரட்டி பிறகு தீர்மானங்களை செனட் சபைக்கு அனுப்பிவைக்க ஜனநாயகக் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க : இந்தியர்களின் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை ஆக்கிரமித்த ஸ்மார்ட்போன்!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.