உலகின் 92 நாடுகளில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இந்நோயால் 3 ஆயிரத்து 500 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ள நிலையில், இந்நோயின் தாக்கம் அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை. இதுவரை, அமெரிக்காவில் சுமார் 329 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 15 பேர் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ள அமெரிக்க அரசு, நாட்டின் இரு அவைகளும் கூடி அவசர மசோதவை கொண்டுவந்துள்ளது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ள அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப், நாட்டில் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக அவசர கால நிதியாக சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.
இதன் மூலம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் குறைந்தவிலை மருந்துகள், மருத்துவ வசதிகள் வழங்க அந்நாட்டு அரசு சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. நோய் கண்டறியப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி, அவர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவு வழங்குமாறு, அனைத்து நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ்: களமிறங்கிய உலக சுகாதார அமைப்பு!