அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் பிரேசில் நாட்டு அலுவலர் ஒருவரை சந்தித்தார். அந்த அலுவலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் ட்ரம்ப், வெள்ளை மாளிகையிலுள்ள ரோஜா தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “நான் பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சோனாரோ, அலுவலரைச் சந்தித்தேன். அது மிக அருமையான சந்திப்பு. இந்தச் சந்திப்பு இரண்டு மணி நேரம் நடந்தது. அதில் அலுவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. எனினும் என்னிடம் கொரோனா தொற்று அறிகுறிகள் எதுவும் இல்லை.
இது தொடர்பாக அட்டவணை ஒன்றை உருவாக்கிவருகிறோம். நம்மிடம் நல்ல சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்ளனர். அவர்கள் என்னை நன்கு கவனித்துவருகின்றனர். இருப்பினும், கொரோனா தொடர்பான சோதனைக்கு நான் மறுப்பு தெரிவிக்க மாட்டேன்” என்றார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் சுகாதார அவசர நிலை பிரகடனம்!