அமெரிக்க தலைவர்கள் மற்றும் அந்நாட்டின் முக்கிய கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு அமெரிக்க உளவுத் துறை ( United States Secret Service).
இந்நிலையில், இந்த அமைப்பின் இயக்குநர் ரண்டால்ப் டெக்ஸ் அலெஸை (Randolph Tex Alles) அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவி நீக்கம் செய்துள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறியுள்ளதாவது, 'அமெரிக்க உளவுத் துறையின் இயக்குநர் ரண்டால்ப் டெக்ஸ் அலெஸ் இன்னும் ஓரிரு தினங்களில் பதவி நீக்கப்படவுள்ளார். இந்த நாட்டுக்காக கடந்த 40 ஆண்டுகள் அவர் ஆற்றிய பணிக்கு அதிபர் ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். அலெஸுக்கு பதிலாக ஜேம்ஸ் மூரேவை (James Murray) ட்ரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார். இவர் அடுத்த மாதம் உளவுத் துறை இயக்குநராக பதவியேற்பார்' எனத் தெரிவித்துள்ளார்.
மர்-அ-லாகோ (Mar-a-Lago)
கடந்த மாதம், ஃபுளோரிடாவில் உள்ள அதிபரின் தனியார் விடுதி மர்-அ-லாகோக்குள் யூஜிங் ஜாங் (Yujing Zhang) என்ற சீனப் பெண் மின்னணு சாதனங்களுடன் அத்துமீறி நுழைந்த சம்பவம் அந்நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது.
ஆனால் இந்த சம்பவத்திற்கும், அதிபர் ட்ரம்பின் இந்த முடிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.