இரண்டு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது மனைவி மெலனியா ட்ரம்புடன் தனி விமானம் மூலம் வாசிங்டன் விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளார்.
இதையடுத்து, ஜெர்மனியில் உள்ள ரைன்லேண்ட் - பாலாடினேட் மாகாணத்தில் இறங்கும் அவர்கள், அங்கிருந்து இந்திய நேரப்படி நாளை காலை 4:30 மணிக்குப் புறப்படவுள்ளனர். மதியம் 12:30 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வந்தடையும் அவர்களை, பிரதமர் மோடி வரவேற்கவுள்ளார்.
அகமதாபாத்தில் நடைபெறவுள்ள 'நமஸ்தே ட்ரம்ப்' என்ற நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் கலந்துகொள்ளவுள்ளனர். புதிதாகக் கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் 1.25 லட்சம் பேர் கூடவுள்ளனர். இதற்காக, குஜராத் அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: புகாரா உணவகத்தில் ட்ரம்புக்கு அசத்தல் சாப்பாடு!