ETV Bharat / international

நேரலையை ஸ்தம்பிக்க வைத்த பாண்டாவின் பிரசவம் - வாழ்த்து மழையில் நனைந்த பாண்டா குட்டி!

வாஷிங்டன்: தேசிய உயிரியல் பூங்காவில் வசிக்கும் 22 வயதான பாண்டா கரடிக்கு குட்டி பிறக்கும் அபூர்வ நிகழ்வை மக்கள் பலரும் ஆர்வமாக கொண்டாடினர்.

author img

By

Published : Aug 23, 2020, 4:50 PM IST

பாண்டா
பாண்டா

அமெரிக்காவின் தேசிய உயிரியல் பூங்காவில் வசிக்கும் 22 வயதான Mei Xiang பாண்டா கரடிக்கு பிரசவம் என்ற செய்தி கடந்த வாரம் வெளியான முதலே மக்கள் மத்தியில் பெரும் ஆர்வம் இருந்தது. அதன்படி, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21,2020) மாலை 6.35 மணியளவில் பாண்டா கரடிக்கு பிரசவ வலி ஏற்பட்டு அழகிய குட்டி பிறந்தது. குட்டியை பார்க்க உலக மக்கள் பலரும் ஆன்லைனில் ஆர்வமாக காத்திருந்தனர்.

கரோனா தொற்றின் காரணமாக பூங்கா தற்காலிகமாக மூடப்பட்ட சிறிது நாள்களில் Mei Xiang பாண்டா கரடிக்கு செயற்கையாக கருவூட்டப்பட்டது. எப்போதும் Tian Tian பாண்டா கரடியிடமிருந்து எடுக்கப்பட்ட உறைந்த விந்து மற்றும் புதிய விந்தின் ஆகியவற்றின் கலவை பயன்படுத்தப்படும். ஆனால், இந்த முறை உறைத்த விந்தை மட்டுமே பயன்படுத்தி அமெரிக்காவில் பிறந்த முதல் பாண்டா குட்டி இதுதான். முன்னதாக, சீனாவில் 23 வயதில் பாண்டாவிற்கு தான் உலகளவில் பழமையான வயதில் வெற்றிகரமாக குட்டியை ஈன்ற பெருமை உள்ளது. தற்போது, அந்த வரிசையில் Mei Xiang இணைந்துள்ளது.

இதுகுறித்து தேசிய உயிரியல் பூங்காவில் பாண்டாக்களின் முன்னாள் கியூரேட்டரான துணை இயக்குனர் பிராந்தி ஸ்மித் கூறுகையில், " எங்களின் மாபெரும் பாண்டாவிற்கு பேபி பிறந்ததை உலகம் முழுவதும் கொண்டாடுகிறது. அச்சமயத்தில் நிச்சயமாக இணையம் ஒரு நொடி ஸ்தம்பித்திருக்கும். நாங்கள் பல குட்டிகள் பிறப்பதை நேரடியாக பார்த்துள்ளோம். தாயின் நடத்தையிலிருந்து குட்டி மிகவும் நன்றாக உள்ளது தெரிகிறது. எதேனும் தவறு ஏற்பட்டால் உடனடியாக களத்திலிறங்க ஊழியர்கள் தயார்நிலையில் இருந்தனர் ஆனால் மூன்று குட்டிகளை ஏற்கனவே வளர்த்த Mei Xiang-கிற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாக தெரியும். தற்போது, குட்டியை பெற்றெடுத்த புதிய ஜோடிக்கு தனிப்பட்ட நேரம் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக பிறந்த குட்டி ஆணா பெண்ணா என்பது தெரியவில்லை. குட்டியை பத்திரமாக பாதுக்காக்க சிறிய கூடு ஒன்றை தாய் கரடி கட்டியுள்ளது. மேலும், ஒரு வாரத்திற்கு சாப்பிடவோ, தண்ணங குடிக்கவோ குழந்தையைவிட்டு தாய் வெளியேறாது. பாரம்பரியத்தின் படி முதல் நூறு நாட்களுக்கு பெயரிடப்படாத இந்த குட்டி குகையில் தான் வளரும். இப்போதைக்கு இளஞ்சிவப்பு நிறம் மற்றும் முடி வளராத குட்டியிடம் தனித்துவமான கருப்பு மற்றும் வெள்ளை ஃபர் அடையாளங்கள் உள்ளன.அதே சமயம், குட்டியின் தந்தை Tian Tian மிகவும் ஆனந்தமாக சுற்றிக்கொண்டிருக்கிறது. குட்டியை பராமரிப்பதில் தந்தைக்கு பெரிய பங்கு கிடையாது. Tian Tian காலை உணவு என்ன வேண்டும் என்பதில் தான் ஆர்வம் காட்டுகிறது" என்றார்.

முன்னதாக Mei Xiangகிற்கு பிறந்த Tai Shan, Bao Bao, and Bei Bei ஆகிய மூன்று குட்டிகளும் ஒப்பந்தத்தின்படி நான்கு வயதில் சீனாவிற்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.