உலகப் பணக்காரர்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் பில்லியனர் இண்டெக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸை பின்னுக்குத் தள்ளி டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் தகவலின்படி பில் கேட்ஸின் சொத்து மதிப்பு தற்போது 127.7 பில்லியன் டாலராக உள்ளது. அதேநேரம் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 127.9 பில்லியன் டாலராக உள்ளது. இருவருக்கும் இடையேயான இடைவெளி மிகவும் குறைவாகவே உள்ளதால், விரைவில் மீண்டும் எலான் மஸ்கை பில் கேட்ஸ் ஓவர் டெக் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன.
49 வயதான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் கிடுகிடுவென உயர்ந்து, 500 மில்லியனை அடைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் வரை மட்டும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது. இதுவே எலான் மாஸ்க் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் பலரை பின்னுக்கு தள்ள காரணமாக அமைந்தது.
பில் கேட்ஸின் தற்போதைய சொத்து மதிப்பு 127.7 பில்லியன் டாலராகும் ஆகும். அவர் பல ஆண்டுகளாக தொண்டு நிறுவனங்களுக்கு பெருமளவில் நன்கொடை அளித்து வருகிறார். அவர் நன்கொடை அளித்திருக்காவிட்டால் முதலிடத்திலேயே தொடர்ந்திருப்பார்.
2017ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஜெஃப் பெசோஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.