மக்களின் வாழ்க்கையில் மின்சாரம், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிசத்தி ஆதாரங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மூன்றாவது உலக போருக்கு எரிசக்தி தட்டுப்பாடுதான் காரணமாக இருக்க முடியும் என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், எரிசக்தியை சேமித்து வைப்பது இன்றியமையாத ஒன்றாகவே கருதப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனமான டெஸ்லா எரிசக்தி சேமிப்புக் கிடங்கு ஒன்றை ஜப்பானில் ஒசாகா ரயில் நிலையத்தில் அமைத்துள்ளது.
இதுதொடர்பாகடெஸ்லா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளபதிவில், "அவசர காலத்தில் ரயில்கள் இயங்க இந்த சேமிப்பு கிடங்கில் உள்ள எரிசக்தி பயன்படுத்தப்படும். இதனால் மக்கள் எவ்வித சிரமமும் இன்றி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
42 அதிநவீன பேட்டரிகள் கொண்ட எரிசக்தி சேமிப்பு கிடங்கு ஆசியாவின் மிகப்பெரிய எரிசக்தி சேமிப்புத்திட்டம் என்பது தெரியவந்துள்ளது.