நியூயார்க்கில் நடைபெற்றுவரும் 74வது ஐநா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடியுடன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரசாத், உயர்மட்ட அலுவலர்கள் உடன் சென்றுள்ளனர்.
பயங்கரவாதம் குறித்து ஐநாவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரசாத், "ஜம்மு-காஷ்மீரின் சிறப்புத் தகுதியை நீக்கிய நடவடிக்கைக்கு எதிர்வினையாக பாகிஸ்தான், இந்தியாவுடனான தூதரக உறவை முறித்துக்கொண்டது.
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை, ஆனால் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் டெரரிஸ்தானாக அந்நாடு செயல்படும்பாது அதனோடு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.