ETV Bharat / international

மெக்சிகோ விமான விபத்தில் 6 பேர் உயிரிழப்பு - ராணுவ விமான விபத்தில் சிக்கி ஆறு பேர் பலி

மெக்சிகோவில் ஏற்பட்ட ராணுவ விமான விபத்தில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

Six killed in plane crash in eastern Mexico

author img

By

Published : Feb 22, 2021, 7:55 PM IST

மெக்சிகோ நகர்: வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் ஏற்பட்ட ராணுவ விமான விபத்தில் ஆறு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இதுகுறித்து பாதுகாப்புப் படை தரப்பில் கூறுகையில், "மெக்சிகோ நாட்டின் பாதுகாப்புப் படை விமானங்களில் ஒன்றான லேர்ஜெட் 45 ராணுவ வீரர்களுடன் வீரக்ரூஸ் பகுதிக்குட்பட்ட எமிலியானோ சபாடா அருகே பறந்து சென்றபோது விமான விபத்து ஏற்பட்டது.

இந்த எதிர்பாராத விபத்தில் சிக்கி, விமானத்தில் பயணம் செய்த ஆறு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இஎல் லென்சரோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் எவ்வாறு விபத்திற்குள்ளானது, வாகனப் பழுதா அல்லது வாகன ஓட்டியின் தவறா, வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றனவா என்பது குறித்து விமான விபத்துத் துறை, நீதிமன்ற ஆணையம், ராணுவ கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்டோர் விசாரித்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.