இது குறித்து வெள்ளை மாளிகையில் தென் கொரிய அதிபர் மூன்-ஜே-இன்னுடன் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வடகொரியா மீது நாங்கள் விதித்துள்ள பொருளாதாரத் தடை தொடர்ந்து நீடிக்கும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், பொருளாதாரத் தடையை மேலும் அதிகரிப்பதில் தனக்கு விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.
கொரியா தீபகற்பத்தில் அணு ஆயுத பயிற்சிகளை நிறுத்துவது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்- வடகொரிய அதிபர் கிம்-ஜாங்-உன் இடையே தாய்லாந்து தலைநகர் ஹனாயில், பிப்ரவரி 26ஆம் தேதி, நடைபெற்ற இரண்டாம் உச்சி மாநாடு தோல்வியில் முடிந்தது.
உச்சி மாநாட்டைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், வடகொரியாவில் உள்ள பெரும்பாலான அணு ஆயுதம் தயாரிக்கும் கூடங்களை அழிப்பதற்கு பதிலாக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை முழுமையாக நீக்கவேண்டும் என அந்நாடு வலியுறுத்தியதாகவும் அதற்கு தான் மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
ஆனால், ட்ரம்ப் கூறியது உண்மை இல்லை என்று தெரிவித்த வடகொரிய வெளியுறுவுத் துறை அமைச்சர் ரி யாங் ஹோ (Ri Yong Ho), தங்கள் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் தடைகளை மட்டும் நீக்கக்கோரி வலியுறுத்தியதாக தெரிவித்தார்.