ETV Bharat / international

ரஷ்யாவுடன் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்து- வெனிசூலா அதிபர் அறிவிப்பு - USA

அரசியல் ஸ்திரத்தன்மையற்ற வெனிசூலா நாட்டுடன் ரஷ்யா 20 ஒப்பந்தங்களைக் கையெழுத்திட உள்ளதாக வெனின்சூலா அதிபர் மடூரோ தெரிவித்துள்ளார்.

மடூரோ
author img

By

Published : Mar 27, 2019, 10:32 AM IST

வெனிசூலாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் நிக்கோலஸ் மடூரோவுக்கு எதிராக சில மாதங்களுக்குமுன் அந்நாட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இந்த சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவாய்டோ தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டார். ஜூவான் குவாய்டோவுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவுத் தெரிவித்திருந்தாலும், சீனா ரஷ்யா உள்ளிட்ட கம்யூனிச சார்புடைய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து மடூரோ ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளது. அதிபர் மடூரோவும் தான் பதவி விலகவோ, பொதுத்தேர்தலோ நடத்தவோ தயாராக இல்லை என்று அறிவித்தார்.

வெனிசூலா கிளர்ச்சியாளர்கள்
வெனிசூலா கிளர்ச்சியாளர்கள்
ஜூவான் குவாய்டோ
ஜூவான் குவாய்டோ

இந்நிலையில், வெனிசூலாவிடம் கொள்கைச் சார்ந்து நீண்டகாலம் நட்பு பாராட்டிவரும் ரஷியா, சுமார் 100 வீரர்களுடன் தனது 2 ராணுவ விமானங்கள் வெனிசூலாவிற்கு அனுப்பிவைத்ததாகத் தகவல் வந்தது. அதிபர் நிக்கோலஸ் மடூரோவுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள ரஷ்யா, தன்நாட்டு ராணுவத்தை வெனிசூலவிற்கு அனுப்பிய தகவலை அறிந்ததும் உடனடியாக அமெரிக்கா எதிர்ப்பை வெளிப்படுத்தியது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை தேவையற்ற பதற்றத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் வெளியுறவுத்துறைச் செயலாளர் மைக்கெல் பாம்பியோ எச்சரிக்கை வெளியிட்டார்.

Micheal pompeo
டிவிட்டரில் மைக்கெல் பாம்பியோ

இதையடுத்து வெனிசூலா அதிபர் மடூரோ, வரும் ஏப்ரல் மாதம் ரஷ்யாவுடன் பொருளாதாரம், வணிகம், எரிசக்தி, கலாச்சாரம், கல்வி சார்ந்த துறைகளில் 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களைக் கையெழுத்திட உள்ளது. மேலும், ரஷ்யா தங்களுக்குப் பெருமளவில் மனிதநேய உதவிகளைத் தொடர்ந்து அளித்து வருகிறது, அமெரிக்கா உதவிகள் செய்வதாக போலிப்பிரச்சாரம் மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா ராணுவ வீரர்கள் வெனிசூலா வந்ததாகத் தகவல் வந்த அடுத்த நாளே இந்த ஒப்பந்த அறிவிப்பை மடூரோ வெளியிட்டிருப்பது, உலக அரசியல் சூழலில் அடுத்த பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.