இன்னும் சில நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை வரவிருக்கும் நிலையில், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாநகரிலுள்ள பாரம்பரிய கிறிஸ்துமஸ் மரம் மிகவும் பிரமாண்டமான முறையில் அலங்கரிப்பட்டுள்ளது.
சுமார் 230 அடி உயரமுள்ள இந்த மரம், வண்ண விளக்குகளைக் கொண்டு அழகுப்படுத்தப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட இந்த மரம், சனிக்கிழமையன்று மக்களின் பார்வைக்கு திறந்துவைக்கப்பட்டது. அப்போது, வானவேடிக்கையுடன் நீடித்த இசை நிகழ்வு சுமார் எழு நிமிடங்கள் வரை நீடித்தது.
24 மாடி உயரமுள்ள இந்த கிஸ்துமஸ் மரம், தண்ணீருக்கு நடுவே அழகிய முறையில் காட்சியளிக்கிறது. இந்த கிஸ்துமஸ் மரம், தற்போது 9 லட்சம் எல்.இ.டி. விளக்குகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எட்டு மாறுபட்ட நிறங்களில், கிறிஸ்துமஸ் மரத்தின் அழகை மக்களால் ரசிக்க முடியும்.
கிறிஸ்துமஸ் சீசனில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இந்த பிரமாண்டமான கிறிஸ்துமஸ் மரம், முதன்முதலில் 1996ஆம் ஆண்டு மக்கள் மத்தியில் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால், 2016ஆம் ஆண்டு இப்பகுதியை தாக்கிய வெள்ளத்தில், பெரும் சேதமடைந்த இம்மரம் 2016, 2017ஆம் ஆண்டுகளில் மக்கள் மத்தியில் காட்சிப்படுத்தபடவில்லை.
இப்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம், முந்தைய மரத்தைவிட 15 மீட்டர் குறைவான உயரமுடையது என்றாலும் இரு ஆண்டுகளுக்கு பின் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த மரத்தைக் காண சுற்றுலா பயணிகள் குவிந்துவருகின்றனர். வரும் ஜனவரி 6, 2020ஆம் ஆண்டு வரை இந்த மரம் மக்கள் மத்தியில் காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது.
இதையும் படிங்க: "உலகின் நீளமான தேசியக் கொடி" - வானத்தில் பறந்த 5 ஸ்கை டைவிங் வீரர்களின் உலகச் சாதனை!