அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கும், சீன நிறுவனங்களுக்கும் கடந்த சில மாதங்களாக டிஜிட்டல் போர் நடந்து வருகிறது. குறிப்பாக, டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டிக்டாக்கின் அமெரிக்க பதிப்பை அமெரிக்க நிறுவனங்களிடம் விற்பனை செய்ய வேண்டும் என திட்டவட்டமாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனாவில் வங்கி கணக்கு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, ட்ரம்ப் அதிபராக இருந்தபோது, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் அமெரிக்க கூட்டாட்சி வரிகளில் $ 750 (80 580) செலுத்தி உள்ளார். சீன வங்கிக் கணக்கு உள்ளூர் வரிகளில் 188,561 டாலர் செலுத்தியுள்ளார். அந்த வங்கிக் கணக்கை ட்ரம்ப் இன்டர்நேஷனல் ஓட்டல் மேனேஜ்மென்ட் கட்டுப்படுத்துகிறது. இது "ஆசியாவில் ஹோட்டல் ஒப்பந்தங்களுக்கான சாத்தியங்களை ஆராய" அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.