ETV Bharat / international

குவாட் உச்சி மாநாட்டில் முழு திருப்தி - ஜோ பைடன்

கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற குவாட் உச்சி மாநாடு முழு திருப்தியாக இருந்தது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன்
ஜோ பைடன்
author img

By

Published : Mar 15, 2021, 8:00 PM IST

இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா நாடுகள் ஒன்றிணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த குவாட் அமைப்பின் தலைவர்கள் பங்கேற்ற முதல் உச்சி மாநாடு கடந்த 12ஆம் தேதி (மார்ச் 12) நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிதே சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் மெய்நிகர் வாயிலாகப் பங்கேற்றனர்.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், குவாட் உச்சி மாநாடு சிறப்பான முறையில் நடைபெற்றது. முதல் சந்திப்பானது திருப்திகரமாக இருந்தது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கூட்டுறவு மேம்பட குவாட் அமைப்பு முக்கியக் கருவியாக விளங்கும்.

பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், சர்வதேச வர்த்தக முதலீடு, பயங்கரவாத தடுப்பு, தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட பல அம்சங்களில் நான்கு நாடுகளும் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பை மேற்கொள்ள உள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ராணுவ ஆட்சியின் பிடியில் சிக்கித்தவிக்கும் மியான்மர்: மேலும் 38 பேர் கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.