நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (யுஎன்ஜிஏ) அமர்வின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி , பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ,
பசிபிக் தீவு நாடுகளின் வளர்ச்சியை முன்னெடுப்பதில் இந்தியா முன்னுரிமை அளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் பிஜி, கிரிபாட்டி குடியரசு, மார்ஷல் தீவுகள் குடியரசு, மைக்ரோனேஷியா கூட்டமைப்பு, பப்புவா நியூ கினியா, சாலமன் தீவுகள் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதையும் பார்க்க: 'ட்ரம்ப்பிற்கு மெகா சைஸ் புகைப்படத்தை பரிசளித்த மோடி!'- என்ன படத்தைத் தந்தார் தெரியுமா?