நியூயார்க்: ஒவ்வொரு ஆண்டும், உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேரின் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டு வருகிறது. வாசகர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் இந்த 100 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்படுகிறது.
அதன்படி 2021ஆம் ஆண்டுக்கான உலகின் நூறு செல்வாக்கு மிக்கோர் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது. இதில், பிரதமர் மோடி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
மோடி குறித்து இந்த இதழில், "சுதந்திர இந்தியாவில் நேரு, இந்திராவுக்கு அடுத்தபடியாக செல்வாக்குமிக்க தலைவரா மோடி உருவெடுத்துள்ளார். ஆனால், இவர், இந்தியாவை மதச்சார்பின்மை நாடு என்பதிலிருந்து இந்து தேசிய நாடு என்ற நிலையை நோக்கி நகர்த்தியுள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மம்தா குறித்து அவ்விதழ் குறிப்பிடுகையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை மம்தா வழிநடத்தவில்லை எனவும் அவரே அந்த கட்சியாக இருக்கிறார் எனவும் கூறியுள்ளது.
மோடி, மம்தா பானர்ஜியை தவிர்த்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரீஸ், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் இப்ராகிம் ராசி, டென்னிஸ் வீராங்கனை நயோமி ஒசாகா உள்ளிட்டோர் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
இதையும் படிங்க: தொலைத் தொடர்பு துறையில் 100% அன்னிய நேரடி முதலீடு - ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்