பிரதமர் நரேந்திர மோடி ஏழு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று அமெரிக்கா சென்றுள்ளார். டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ஹூஸ்டன் நகரில் அவரை வரவேற்க இந்தியர்கள் பலர் திரண்டனர்.
அவர்களிடம் உரையாடிக்கொண்டிருந்த பிரதமரிடம், காஷ்மீரி பண்டிட் ஒருவர் காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புத் தகுதியான 370ஆவது சட்டப்பிரிவை நீக்கியதற்கு நன்றி தெரிவித்தார். காஷ்மீரிலுள்ள ஏழு லட்சம் பண்டிட்களின் சார்பில் தன்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என மனமுறுகி மோடியின் கையில் முத்தமிட்டார். இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.