பெரு நாட்டின் கல்லோ பகுதியில் இரண்டு டன்களுக்கும் அதிகமான கோக்கெய்ன் போதைப்பொருளை அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
பெல்ஜியத்துக்கு செல்லும் கன்டெய்னரில் ஆய்வு செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர், அதிலிருந்த போதைப்பொருளை மதிப்பீடு செய்து, அதன் மதிப்பு 90 மில்லியன் டாலருக்கும் (இந்திய மதிப்பில் 667 கோடி ரூபாய் ) மேல் இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கள்கிழமையன்று காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையின்போது இந்த போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இதுவரை ஒருவரும் கைது செய்யப்படாதது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜப்பானை புரட்டிப்போட்ட லுபிட் சூறாவளி