ETV Bharat / international

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி! - வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு

வாஷிங்டன்: நேற்றிரவு வெள்ளை மாளிகை அருகே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்

Gunshoot in US
author img

By

Published : Sep 20, 2019, 11:40 AM IST

Latest International News அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இத்துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஐந்து பேர் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு பேரின் நிலைமை மிக மோசமாக உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரவு 10 மணியளவில் நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம், இதுவரை தெரியவில்லை. அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

வெள்ளை மாளிகைக்கு மூன்று கிலோமீட்டர் அருகிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்கலாமே: இந்தியாவுக்கு வர்த்தக அந்தஸ்து வழங்க ட்ரம்புக்கு கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.