ETV Bharat / international

அமெரிக்க அதிபர்யா நான் - ஆங் அதுக்கு? - பேஸ்பால் மைதானத்தில் ட்ரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அங்குள்ள பேஸ்பால் மைதானத்துக்குச் சென்றபோது மக்கள் நக்கலாக கோஷமிட்ட வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

Trump
author img

By

Published : Oct 28, 2019, 11:28 PM IST

அமெரிக்க நேரப்படி நேற்று காலை 9 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப் ஐஎஸ் தலைவர் அபூ பக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டதாக அதிகார்பூர்மாக அறிவித்தார். இது ட்ரம்ப் அரசின் மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

அப்படிப்பட்ட சாதனையை நிகழ்த்திய அதிபர் ட்ரம்ப் அவரது மனைவி மெலினாவுடன் வாஷிங்டனில் நேற்று மாலை வாஷிங்டன் நேஷனல்ஸ் மற்றும் ஹூஸ்டன் ஆஸ்ட்ரோஸ் ஆகிய அணிகளுக்கிடையே நடைபெற்ற வோல்ட் சீரிஸ் பேஸ்பால் போட்டியைக் காண வருகை தந்தார். 1993ஆம் ஆண்டுக்குப் பின் வாஷிங்டனில் இந்த போட்டி நடைபெறுவது இதுவே முதல்முறை என்பதால் போட்டியைக்காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.

முன்னாள் ராணுவ வீரர்களை உற்சாகமாகக் கரகோஷம் எழுப்பி வரவேற்ற மக்கள், தொடர்ந்து வந்த ட்ரம்பப்பை நக்கலாக குரலெழுப்பி வரவேற்றனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்திலும் வைரலாகி பரவிவருகிறது. மேலும், அவருக்கு எதிராகப் பதாகைகளையும் ஏந்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இதை சட்டை செய்யாமல் ட்ரம்ப் முழுப் போட்டியையும் பார்த்து ரசித்தார்.

ட்ரம்ப்புக்கு எதிராக கோஷமிட்ட ரசிகர்கள்

2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்த மாகாணத்தில் வெறும் 4 விழுக்காடு வாக்குகளை மட்டுமே டிரம்ப் பெற்றிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: ஐ.எஸ். இயக்கத் தலைவரை நாயைப் போல் சுட்டுக் கொன்றோம் - ட்ரம்ப்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.