கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக நியூயார்க்கில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ கூறுகையில்," நேற்று அதிகபட்சமாக ஒரே நாளில் 731 பேர் நியூயார்க்கில் உயிரிழந்துள்ளனர். இதனால், கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 489 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு 2001இல், நியூயார்கில் நடைபெற்ற இரட்டை கோபுரங்கள் தாக்குதலில் 2 ஆயிரத்து 753 பேர் உயிரிழந்தனர்.
அந்த எண்ணிக்கையைத் தற்போது கரோனா தாண்டியுள்ளது வேதனை அளிக்கிறது. இச்சம்பவம் நியூயார்க் வாசிகளுக்கு, இன்று மீண்டும் அதிக வலியை உருவாகியுள்ளது.
தற்போது மக்கள் மத்தியில் சமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளதால், கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை நாட்டில் குறைந்து வருகிறது சற்று மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார். அமெரிக்கா முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 4 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், 12 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா வைரஸ்: உலகளவில் இவ்வளவு பேர் உயிரிழப்பா?