ETV Bharat / international

நியூயார்க் நகரில் அவசரநிலை பிரகடனம்; சாலையில் கொட்டிக் கிடக்கும் பனியை அகற்றும் பணி தீவிரம்! - New York snowstorm

நியூயார்க் நகரில் வரலாறு காணாத பனிப்புயல் வீசிவரும் நிலையில் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

New York declares emergency New york snowstorm snowstorm in US US snowstorm snowstorm in New York emergency in New York Andrew Cuomo announces emergency in New York நியூயார்க் நகரில் வரலாறு காணாத பனிப்பொழிவு நியூயார்க் பனிப்புயல் பனிப்புயல் snowstorm New York snowstorm நியூயார்க் நகரில் அவசரநிலை பிரகடனம்

author img

By

Published : Feb 2, 2021, 4:37 PM IST

நியூயார்க்: கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்புவாழ்க்கை முடங்கியுள்ள நிலையில் நியூயார்க் மாகாண அரசு அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளது.

நியூயார்க் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது தொடர்பாக அம்மாகாண ஆளுநர் கியூமோ விடுத்துள்ள அறிக்கையில், இந்தப் பனிப்புயல் சாதாரணமானது அல்ல, இதில், முக்கிய கவலை என்னவென்றால், இன்று பிற்பகலில் பனிப்புயல் ஆபத்தான நிலையை அடையலாம். பனிப்பொழிவு காரணமாக சாலைகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. சாலைகளில் கொட்டியுள்ள பனியை அகற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.

நியூயார்க்வாசிகள் சாலைகளிலும் பயணிக்க வேண்டும் என்றால், திட்டமிட்டு செல்லுங்கள். மிகவும் அவசியமான பயணம் என்றால் மட்டும் வெளியே செல்லுங்கள். மற்றப்படி வெளியே வரவேண்டாம். லாங் ஐலேண்ட் ரெயில்ரோடு மற்றும் மெட்ரோ-நார்த் பகுதிகளின் போக்குவரத்து சேவை முடங்கிபோய் உள்ளது. நியூயார்க் நகரம், லாங் தீவு மற்றும் மிட்-ஹட்சன் பிராந்தியங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பனிப்புயல் காரணமாக லாங் தீவில், குறிப்பாக கிழக்கு லாங் தீவில் 60 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும், அதே சமயம் பல இடங்களில் 40 மைல் மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும். பனிப்புயல் காரணமாக நியூயார்க் நகரத்தில் உள்ள அனைத்து பொதுப் பள்ளிகளும் விடுமுறை அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், “நியூயார்க் நகரம், வடகிழக்கு நியூ ஜெர்சி, லோயர் ஹட்சன் பள்ளத்தாக்கு, நாசாவ் கவுண்டியின் பெரும்பகுதி மற்றும் தென்மேற்கு கனெக்டிகட்டின் பகுதிகளில் பனிப்பொழிவு அதிபனிப்புயல் வீசும் என தேசிய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.

இதையும் படிங்க: சாலைகளின் நடுவே மலைபோல் குவிந்திருக்கும் பனி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.