பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் லண்டன் மேயராக இருந்தபோது, ஜெனிஃபர் அர்க்யூரி என்ற அமெரிக்க நடிகையை காதலித்து வந்ததாகவும், அப்பெண்ணுக்குச் சாதகமாக அதிகார துஷ்பிரயோகத்தில் அவர் ஈடுபட்டதாகவும் போரிஸ் மீது குற்றச்சாட்டு இருந்துவந்தது.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஜெனிஃபர் அர்க்யூரி, பிரதமர் போரிஸுடனான உறவு குறித்து விளக்கமளித்தார். அப்போது அவர், "லண்டன் மேயராக போரிஸ் இருந்தபோது, அவருடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. இலக்கியத்தின் மீதான ஆர்வமே எங்களது நட்பின் அடித்தளமாக அமைந்தது" என்றார்.
![போரிஸ் ஜானுடன் ஜெரிஃபர் அர்க்யூரி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4680987_sadf.jpg)
போரிஸ் ஜான்சனை காதலித்தது உண்மைதானா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "அது உங்களுக்கு தேவையில்லாத ஒன்று. அந்தக் கேள்விக்கு உங்களிடம் பதலளிக்க நான் விரும்பவில்லை" என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதனிடையே, போரிஸ் லண்டன் மேயராக இருந்தபோது, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டிருந்தாரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருவதாக லண்டன் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் வாசிங்க : ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டால் ஒப்பந்தத்துடன் வெளியேற தயார்: பிரிட்டன் பிரதமர்