ETV Bharat / international

தடுப்பூசி விநியோகத்தில் பாகுபாடு: கிரேட்டா குற்றச்சாட்டு

நடுத்தர நாடுகளில் நிலவும் தடுப்பூசி விநியோகப் பாகுபாடுகளைக் களைய பணக்கார நாடுகள் முன்வர வேண்டும் எனச் சூழலியல் இளம் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

Greta Thunberg urges nations to 'step up' fight against COVID-19 vaccine inequality

author img

By

Published : Apr 21, 2021, 12:20 PM IST

வாஷிங்டன்: கரோனாவால் பாதிக்கப்பட்ட உலக நாடுகள் அனைத்தும் தமது மக்களைத் தொற்றிலிருந்து காக்க தடுப்பு மருந்துகளை நாடியுள்ளன. ஆனால், சில நாடுகள் தங்களது பணபலத்தைத் தவறாகப் பயன்படுத்தி அதிகப்படியான தடுப்பு மருந்துகளைக் கொள்முதல் செய்வதால் நடுத்தர, ஏழை நாடுகள் முதியவர்களுக்கும், பிற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் தட்டுப்பாடுகளைச் சந்தித்துவரும் நிலை உள்ளது என சூழலியல் இளம் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அதிக வருமானம் கொண்ட நாடுகளில் நான்கு பேரில் ஒருவருக்கு கரோனா தடுப்பூசி கிடைத்துள்ளது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 500-க்கும் மேற்பட்டவர்களில் ஒருவருக்கே கிடைத்துள்ளது.

உலகளாவிய கரோனா தடுப்பூசி விநியோகத்தை உறுதிப்படுத்தவும், கோவாக்ஸை ஆதரிக்கவும் எனது அறக்கட்டளை ஒரு லட்சம் யூரோக்களை நன்கொடை அளிக்கும்.

Greta Thunberg urges nations to 'step up' fight against COVID-19 vaccine inequality
கிரேட்டா ட்வீட்

எனது அறக்கட்டளையின் இந்தப் பணம் விருதுகள், பரிசுகளிலிருந்து வருகிறது என்பதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். எனது செயல்பாட்டிற்கு நான் பணம் எதுவும் பெறவில்லை.

இந்தப் பணம் ஏழை நாடுகளுக்குத் தடுப்பூசி பெறுவதை உறுதிசெய்ய வேண்டும். தடுப்பூசி விநியோகப் பாகுபாட்டை நீக்க பணக்கார நாடுகள் முன்வர வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.