அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளதையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இருவரும் இறுதிகட்ட பரப்புரையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
அதிபர் தேர்தலின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் அதிபர் வேட்பாளர்களின் முதல் பொது விவாதம், அந்நாட்டின் க்ளீவ்லாந்த் நகரில் நடைபெற்றது. இதையடுத்து, இரண்டாவது விவாதம் வரும் அக்டோபர் 22ஆம் தேதி அந்நாட்டில் உள்ள பெல்மோன்ட் பல்கலைகழகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த விவாதத்தின் நெறியாளராக கிரிஸ்டென் வெல்கர் பங்கேற்கவுள்ளார். இரண்டாவது விவாதத்தின் முக்கியத் தலைப்புகளாக தேசப் பாதுகாப்பு, கோவிட்-19 பரவல் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. நிறவெறி, பருவநிலை மாற்றம் போன்ற விவகாரங்களும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் விவாதத்திற்குப்பின் அதிபர் ட்ரம்பிற்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, இந்த இரண்டாவது விவாதம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நேபாளத்தில் அத்துமீறும் சீனா - விளக்கமும் பின்னணியும்!