அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜெபிஎல் என்னும் நிறுவனத்தால் 'பெர்சவரன்ஸ் ரோவர்' வடிவமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி நாசா விஞ்ஞானிகள் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தனர். ஒரு டன் எடை மற்றும் ஆறு சக்கரங்கள் உள்ள பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கோள்களில் உயிர்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும்.
ஏழு மாத பயணத்திற்குப் பிறகு இந்த விண்கல செவ்வாய் கிரகத்தை நெருங்கியது. இவ்விண்கலம் பூமியிலிருந்து ரோபோட்டிக் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும். 40 கிலோ மீட்டர் அகலமுள்ள ஜெசீரோ கிரேட்டர் என்னும் பள்ளத்தில் இதைத் தரையிறக்க இலக்கு வைக்கப்பட்டது. இதை தரையிறக்கத்தை பயங்கரமான 7 நிமிடங்கள் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம்
செவ்வாயின் வளிமண்டலத்தை தொடும் 'பெர்சவரன்ஸ் ரோவர்' அங்கிருந்து தரையை அடைய 7 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். ஆனால், வளிமண்டலத்தை நெருங்க சுமார் 10 நிமிடத்திற்கு முன்பு விண்கலத்திலிருந்து ரோவர் விடுவிக்கப்பட்ட பிறகு 13ஆயிரம் மைல் வேகத்தில் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்திற்குள் நுழையும்.
தன்னைத் தானே வழிநடத்தும் 'பெர்சவரன்ஸ் ரோவர்'
செவ்வாய் கிரகத்திற்குள் நுழையும் முன் அதன் அதிக வெப்பத்தை போக்க வெப்பக் கவசம் அதில் அமைக்கப்பட்டுள்ளது. பின்பு விண்கலமாக மாறும் ரோவர் தன்னைத் தானே வழிநடத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாயில் தரையிரக்கம் செய்யப்படும் 'பெர்சவரன்ஸ் ரோவர்' விண்கலம் நேவிகேஷன் தொழில் நுட்பம் மூலம் செவ்வாய் கிரகத்தின் தரையை காணும்.
செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய பெர்சவரன்ஸ் விண்கலம் இன்று தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது என நாசா தெரிவித்துள்ளது.
மண் மற்றும் கற்களை எடுத்துவரும் விண்கல்
இந்த விண்கலம் செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும் அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்ப எடுத்து வரவும் அனுப்பப்பட்டுள்ளது. அவை இந்த ஆண்டு இறுதியில் பூமியை வந்தடையும். இங்கு சுமார் 500 அடி ஆழமுள்ள இந்தப் பள்ளத்தில் ஒரு காலத்தில் குறிப்பிடும் வகையில் நீரோட்டம் இருந்தது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
செவ்வாயில் தரையிறங்கியுள்ள 'பெர்சவரன்ஸ் ரோவர்' செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்பது பற்றிய ஆய்வுக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தில் உள்ள 23 கேமராக்கள் செவ்வாயில் நுண்ணுயிர்கள் உள்ளதா என்பதை அறியவும் உதவும்.
இதையும் படிங்க: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா முக்கிய கூட்டு நாடு - அமெரிக்கா