கரோனா நோய்க் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவ மருத்துவ சாதனங்களை உருவாக்க, கலிஃபோர்னியாவின் வடக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் உள்ள ஆன்டெலோப் பணிக்குழுவுடன் இணைந்து நாசா நிறுவனம் செயல்படவுள்ளது.
நாசா நிறுவனம், கலிஃபோர்னியா ஆராய்ச்சிக் குழுக்களுடன் இணைந்து கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் கருவிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. ஒரு அவசர மருத்துவத் தேவைகளுக்கு கிடைக்காத கருவிகளை தயார் செய்யும் முனைப்பில், நாசா நிறுவனம் இந்த விவகாரத்தில் கால் பதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அவர்களின் முதல் முயற்சிகளில் ஒன்றாக, ஒரு முன்மாதிரி ஆக்ஸிஜன் ஹூட்டை உருவாக்கியுள்ளது. இதனை மருத்துவர்களுக்குக் கொடுத்து, தற்போது பரிசோதித்து வருவதாகவும், 500 ஆக்ஸிஜன் ஹூட் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.