ETV Bharat / international

1970லிருந்து 2005வரை 93 கொலைகள்... அமெரிக்காவை அதிரவைத்த சீரியல் கொலையாளி மரணம் - சீரியல் கொலையாளி மரணம்

அமெரிக்காவை அதிரவைத்த சீரியல் கில்லர் சாமுவேல் லிட்டில் உயிரிழந்ததாக அந்நாட்டு மறுவாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

Most prolific serial killer in US history dies

author img

By

Published : Dec 31, 2020, 4:52 PM IST

வாஷிங்டன்: அமெரிக்காவின் குற்ற வழக்குகளின் வரலாற்றை புரட்டி பார்த்தவர்களுக்கு மறக்க முடியாத பெயராய் பதிந்திருப்பது சாமுவேல் லிட்டில். லிட்டில் என பெயர் வைத்திருக்கும் இவர் செய்த கொலைகளின் பட்டியலோ நீண்டு கொண்டே செல்கிறது. இவரால் பெருமளவில் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள், பாலியல் தொழிலாளிகள், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள், சமூகத்தின் ஓரங்களில் வாழும் ஏழை மக்கள். இவர்கள் கொலை செய்யப்பட்ட பின்னர் அந்த கொலைக்கான காரணமோ, குற்றவாளியை அடையாளம் காணும் விசாரணைகளோ அவ்வளவு எளிமையாக காவல் துறையினருக்கு இருந்ததில்லை.

அமெரிக்க காவல் துறை அளித்த தகவலின்படி, இதுவரை இவர் 93 கொலைகளை அவர் செய்துள்ளார். அதில் இதுவரை 60 கொலைகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. 1970ஆம் ஆண்டிலிருந்து 2005ஆம் ஆண்டிற்குள்ளாக இந்த கொலைகளை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இவர் 2005ஆம் ஆண்டில் 93ஆவது கொலையை செய்தார் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 80 வயதாகும் இவர் கலிபோர்னியாவில் உள்ள மறுவாழ்வு மையத்தில் இருந்துவந்தார். இவர் நீரிழிவு, இதய நோய் உள்ளிட்ட சில நோய்களால் பாதிக்கப்பட்டு வந்ததையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

2005ஆம் ஆண்டிலிருந்து சிறையில் இருந்த இவர் மீது 60 கொலை குற்றங்கள் நிரூபிக்கப்பட்டபோதிலும் அவர், தான் யாரையும் இதுவரை கொலை செய்யவில்லை என தொடர்ந்து வாதிட்டு வந்ததாக மறுவாழ்வு மையத்தின் காப்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் இறக்கும் தருவாயில் பல கொலை குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறினார். இவர் பெரும்பாலான கொலைகளை புளோரிடா மாகாணத்திலும், தெற்கு கலிஃபோர்னியாவிலும் நிகழ்த்தியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பலகட்டங்களில் காவலர்கள் நடத்திய விசாரணையில் தனது சொந்த வாழக்கையை பற்றி சிறு குறிப்புகள் மட்டும் அளித்துள்ளார். அதில் அவர் பாட்டி மூலம் வளர்க்கப்பட்டவர் என்றும், இவர் சிலமுறை தனது பெயரை சாமுவேல் மெக்டோவல் என பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. அவர் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

மழலையர் வகுப்பில் படிக்கும்போது ஆசிரியர் ஒருவர் அவரது கழுத்தில் கை வைத்ததில் பாலியல் ரீதியில் தூண்டப்பட்ட அவர், தான் நேசித்தவர்களின் கழுத்துகளைப் பார்ப்பதை தவிர்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு: தெலங்கானாவில் கொண்டாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.