அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தின் தலைநகர் அட்லாண்டாவில் 2019ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகிப் போட்டி நடைபெற்றது. நீச்சலுடை சுற்று, சமூகத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்த அறிவு என பல சுற்றுகள் நடத்தப்பட்டது. இறுதிச் சுற்றில் தென் ஆப்பிரிக்கா, மெக்சிகோ, பியூர்டோ ரிகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த அழகிகள் களத்திலிருந்தனர்.
இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அழகி சொசிபினி துன்சி பேசுகையில், "என்னைப் போன்ற நிறமும் கூந்தலுமுடைய பெண்கள் எல்லாம் அழகற்றவர்களாகக் கருதப்படும் இடத்திலிருந்து வந்தவள் நான். என்னை நான் அழகானவளாக ஒருபோதும் கருதியதில்லை. ஆனால் இந்த சிந்தனையெல்லாம் இத்துடன் முடியும் என்று நினைக்கிறேன்" என்றார்.
இறுதியில் 68ஆவது பிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்க அழகி சொசிபினி துன்சி அறிவிக்கப்பட்டார். பியூர்டோ ரிகோ நாட்டைச் சேர்ந்த மெடிசன் ஆண்டர்சன் இரண்டாம் இடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தாண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டித் தொடர் ஏற்கனவே பல சிறப்புகளைப் பெற்றிருந்தது. இத்தொடரில் பங்கேற்ற முதல் தன்பால் ஈர்ப்புடையவர் என்ற பெருமையை மியன்மார் நாட்டைச் சேர்ந்த அழகி ஸ்வீ ஜின் ஹெட்டெட் பெற்றார்.
இதையும் படிங்க: ஹெய்தி தப்பிச் சென்றாரா நித்யானந்தா? ஈகுவடார் தூதரகம் தகவல்