ETV Bharat / international

பில் கேட்ஸின் தந்தை உயிரிழந்தார்! - வில்லியம் ஹெச். கேட்ஸ்

வாஷிங்டன்: பில் கேட்ஸின் தந்தை வில்லியம் ஹெச். கேட்ஸ் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.

Microsoft co-founder Bill Gates lost his father

author img

By

Published : Sep 16, 2020, 5:21 PM IST

உலகப் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை தொடங்கியவருமான பில் கேட்ஸின் தந்தை வில்லியம் ஹெச். கேட்ஸ் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். வழக்கறிஞராகப் பணிபுரிந்த அவருக்கு வயது 94.

தந்தையின் மறைவு குறித்து பில் கேட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "என் அப்பா 'உண்மையான' பில் கேட்ஸ். நான் அவரைப் போலதான் இருக்க முயல்கிறேன், ஒவ்வொரு நாளும் நிச்சயம் அவரை நினைத்து நான் வாடுவேன்" என்று பதிவிட்டுள்ளார்.

அல்சைமர் எனப்படும் ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்த கேட்ஸ் வாஷிங்டனிலுள்ள தனது வீட்டில் இன்று அதிகாலை உயிரிழந்தார். பில் கேட்ஸ் மேலும், "என் அப்பாவின் ஞானம், தாராள மனப்பான்மை, பணிவு ஆகியவை உலகெங்கிலும் உள்ள மக்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

எனக்கு வயதாகும்போதுதான், ​​வாழ்க்கையில் நான் செய்த எல்லாவற்றிலும் எனது அப்பாவின் முக்கியப் பங்கு இருந்ததை உணர்ந்தேன். மைக்ரோசாஃப்டின் ஆரம்ப ஆண்டுகளில், சட்டரீதியாகப் பல விஷயங்களில் அவரிடமிருந்து ஆலோசனை பெற்றுள்ளேன்" என்று எழுதியுள்ளார்.

வில்லியம் ஹெச். கேட்ஸின் மறைவுக்கு தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக உள்ள சத்யா நதெல்லாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வளர்ச்சியில் பில் கேட்ஸ் சீனியரின் பங்கு முக்கியமானது. அவர் இங்கு முக்கியப் பங்கு வகித்தார்.

  • Bill Gates Sr. is an important part of the Microsoft story; he helped shape our culture, played a vital role in our community, and influenced our philanthropic programs. We send our condolences to the Gates family and gratitude for Bill Sr.'s enduring legacy. https://t.co/Qu6FcumNa8

    — Satya Nadella (@satyanadella) September 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கேட்ஸ் குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கலையும், பில் சீனியர் எங்கள் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கிற்கும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜப்பானில் புதிய பிரதமர் பதவியேற்கவுள்ள நிலையில் மொத்த அமைச்சரவையும் ராஜினாமா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.