மெக்சிகோவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது செலயா நகரம். இந்த நகரம் வழியாக, ஹைட்ரோ கார்பன் எரிவாயு குழாய் ஒன்று செல்கிறது.
இந்நிலையில், இந்த குழாயின் ஒருபகுதி நேற்று திடீரென வெடித்துள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கி, இரண்டு பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக அந்நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போதுமான அளவு எரிவாயு இல்லாமல் மெக்சிகோ திண்டாடி வரும் சூழ்நிலையில், இந்த விபத்தால் அங்கு மேலும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.