கடந்த மே மாதம் 25ஆம் தேதி காவலர்களிடம் கோரப்பிடியில் சிக்கி மூச்சுத் திணறி, அமெரிக்க-ஆப்பிரிக்க கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளாய்டு உயிரிழந்தார்.
இவரது மரணத்திற்கு பிறகு உலகின் பல பகுதிகளில் நிறவெறிக்கு எதிராக'கறுப்பர்கள் வாழ்க்கைப் போராட்டம்' என்ற வாசகத்தோடு பல்வேறு ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு மக்களும், பிரபலங்களும் கருத்து தெரிவித்துவந்தனர்.
இந்நிலையில், ஹூஸ்டன் மாகாணம் டெக்சாஸ் மாநிலத்தில் ஆஸ்டின் நகரில் நடந்த 'கறுப்பர்கள் வாழ்க்கைப் போராட்டம்' நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தின்போது, அடையாளம் தெரியாத ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
நேற்று இரவு 9.52 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அந்நாட்டின் KVUE தொலைக்காட்சி நிலையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
துப்பாக்கியால் சுடப்பட்டதைத் தொடர்ந்து அந்த நபர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கின்றனர்.
வாகனத்தில் வந்த ஒரு நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. மேலும், ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்த ஊடகங்களின் வாயிலாகவும், சிசிடிவி காட்சிகளின் வாயிலாகவும் விசாரணை நடைபெற்றுவருவதாகவும் தெரிவிக்கின்றனர்.