ETV Bharat / international

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடங்கியது! - joe biden

சர்வதேச அளவில் பெரும் கவனத்தை பெறும் அமெரிக்க தேர்தல் தற்போது தொடங்கியது. நியூ ஹம்ப்ஷைரில் உள்ள டிக்ஸ்வில் நோட்ச், மில்ஸ்பீல்ட் ஆகிய நகரங்களில் முதல்கட்ட வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.

US Election 2020 begins
US Election 2020 begins
author img

By

Published : Nov 3, 2020, 4:33 PM IST

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, ட்ரம்பை விட பிடன் 6.7 விழுக்காடு வாக்குகள் முன்னிலை உள்ளார். ஆனால், இழுபறி மாகாணங்களான ப்ளோரிடா, வட கலிபோர்னியா, பென்சில்வேனியா, மிச்சிகன், விஸ்கான்சின் மற்றும் அரிசோனா ஆகியவற்றில் 2.8 விழுக்காடு மட்டுமே பிடன் முன்னிலை வகிக்கிறார்.

ட்ரம்ப் தனது கடைசி தேர்தல் பரப்புரையை வடக்கு கலிபோர்னியா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய இடங்களில் நிகழ்த்தினார். பிடனோ பென்சில்வேனியா மற்றும் ஒஹியோவில் தனது இறுதி பரப்புரையை முடித்தார்.

முதல்கட்ட வாக்குகள் காலை 6 மணிக்கு கிழக்கு கடற்கரையோரம் உள்ள முக்கிய நகரங்களில் தொடங்கியது. இறுதிகட்ட வாக்குகள் அலாஸ்காவில் முடிவடைகிறது.

முன்கூட்டியே வாக்குப்பதிவு செய்யும் முறையை பயன்படுத்தி 9 கோடியே 80 லட்சம் பேர் வாக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.