இதழியல், பத்திரிகையாளர்கள், இலக்கியம், புகைப்படக்கலை உள்ளிட்ட பல்வேறு துறையினரையும் கவுரவிக்க வழங்கப்படும் விருதான புலிட்சர் விருதுகள், அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தினரால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
21 பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருதுகளின் 2019-ஆம் ஆண்டுக்கான வெற்றியாளர் பட்டியலை முழுமையாக வெளியிட்டுள்ளது. இதன்படி, சிறந்த புனைவு நூலாக ரிச்சர்ட் பவர் எழுதிய 'தி ஓவர்ஸ்டோரி' தேர்தெடுக்கப்பட்டுள்ளது.
சிறந்த புகைப்படக் கலைஞராக வாஷிங்டன் போஸ்ட் இதழைச் சேர்ந்த லொரன்ஸோ டக்னோலிக்கிற்கு கிடைத்துள்ளது. ஏமனில் ஏற்பட்டிருக்கும் பஞ்சத்தை பதிவு செய்துள்ள அவரின் புகைப்படங்கள் இவ்விருதை பெற்றுள்ளன. சிறந்த வரலாற்று புத்தகமாக, டேவிட் பிளைட் எழுதிய 'புராஃபெட் ஆப் பிரீடம்' புத்தகத்துக்கு கிடைத்துள்ளது.
இது கருப்பின விடுதலைப் போராளியான ஃபெட்ரிக் டக்ளஸின் வரலாற்றை விவரிக்கிறது. விருதை வென்றவர்களுக்கு $15,000 (இந்திய மதிப்பின்படி ரூ 10 லட்சம்) பரிசுத் தொகையும் தங்க நாணயமும் வழங்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.