கியூட்டோ: ஈக்வடார் நாட்டின் தலைநகர் கியூட்டோ, லா காஸ்கா, லா குமுனா பகுதிகளில் இரண்டு நாள்களுக்கும் மேலாக கனமழை பெய்தது. இதன்காரணாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கியூட்டோவில் உள்ள ஆண்டியன் மலைதொடர்களை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் பாறைகள் சரிந்துவிழுந்துள்ளன. இந்த நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகியுள்ளன. 20க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நகரின் முக்கிய சாலைகள் சேதமடைந்துள்ளதால், மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஈக்வடார் நாடானது தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த நாடு அமேசான் காடுகளையும், ஆண்டியன் மலைப்பகுதிகளையும் உடைய மாறுபட்ட நிலப்பரப்பையும், அரியவகை வனவிலங்குகளையும் கொண்டது. இதன் நிலப்பரப்பில் கலாபகோஸ் தீவுக்கூட்டங்கள் உள்ளன. இந்த நாட்டின் தலைநகர் கியூட்டோ, 17 ஆம் நூற்றாண்டுகளில் ஸ்பானிஷ் காலனித்துவத்தின் கீழ் இருந்தது.
இதையும் படிங்க: உருமாறிய ஒமைக்ரான் 57 நாடுகளில் பரவல் - உலக சுகாதார அமைப்பு