அமெரிக்காவின் சாண்டா குரூஸ் கவுண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஷெரிஃப். தொழிலதிபரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான இவரை கடந்த புதன்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு வீட்டிற்குள் புகுந்து அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தினர். இதையடுத்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் அந்நாட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஷெரிஃபை தேடிவந்தனர்.
இந்நிலையில் அந்தப் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் கேட்பாரற்று நிலையில் கார் ஒன்று நிற்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அங்கு சென்ற காவல் துறையினர் காரை சோதனை செய்தபோது காணாமல்போன ஷெரிஃப் சடலமாக கிடப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்துவிட்டு இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:Syria War சிரியாவில் துருக்கி வான்வழித் தாக்குதல்: 2 அப்பாவிகள் உயிரிழப்பு!