வாஷிங்டன்: அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 3ஆம் நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மூன்று நாளாக தொடர்ந்து நடைபெற்றுவந்தது. இந்நிலையில், பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவை என்ற நிலையில், பைடன் 284 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.
முன்னதாக, 264 இடங்களில் பைடன் வெற்றி பெற்றியிருந்தார். இழுபறி மாகாணங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில், பைடன் பெற்ற வெற்றி அவரை 46ஆவது அமெரிக்க அதிபராக அமரவைத்துள்ளது.
இதன்மூலம், இந்திய வம்சாவழி தமிழ்நாட்டை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக பெண் ஒருவர் துணை அதிபராக தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.