ETV Bharat / international

2020ஆம் ஆண்டின் சிறந்த நபர்களாக ஜோ பைடன், கமலா ஹாரிஸ் தேர்வு - International Latest News

அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடன், துணை அதிபராக பதவியேற்கவுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோரை நடப்பு ஆண்டின் சிறந்த நபர்களாக டைம நாளிதழ் தேர்வு செய்துள்ளது.

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ்
ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ்
author img

By

Published : Dec 11, 2020, 4:05 PM IST

வாஷிங்டன்: அமெரிக்காவின் டைம் நாளிதழ் 1927ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நபர்களை தேர்வு செய்து அவர்களை கௌரவித்து வருகிறது. உலக அளவில் அதிகம் பேசப்பட்ட, பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நபர்கள் இதில் தேர்வு செய்யப்படுவர்.

அந்தவகையில், 2020ஆம் ஆண்டின் சிறந்த நபர்களாக அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடன், துணை அதிபராக பதவியேற்கவுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்கா வரலாற்றினை மாற்றியவர்கள் எனப் புகழாரம் சூட்டி அவர்களது பெயர் நாளிதழில் இடம்பெற்றுள்ளது.

கரோனா பரவல் காலத்தில் தங்களது முழு பங்களிப்பை வழங்கி வரும் முன் களப் பணியாளர்கள், மருத்துவ வல்லுநர் டாக்டர் அந்தோனி ஃபவுசி, அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டெனால்ட் ட்ரம்ப் ஆகியோரை பின்னுக்கு தள்ளி ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோரது பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: பைடனின் கரோனா டாஸ்க் ஃபோர்ஸில் இணையும் மூன்று முக்கிய நபர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.